தமிழகம் முழுவதும் போராட்டம்!.. களத்தில் இறங்கும் தவெக.. அரசியல் பரபர...

Mahendran

ஞாயிறு, 8 மார்ச் 2026 (12:06 IST)
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலை விரைவில் சந்திக்கவிருக்கிறது.. இது இந்த கட்சி சந்திக்கவுள்ள முதல் சட்டமன்ற தேர்தலாகும்.

அடிப்படையில் விஜய் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால் அவருக்கான ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. மேலும் பொதுமக்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது.. எனவே அவையெல்லாம் வாக்குகளாக மாறும் என விஜயும், தவெகவினரும் நம்புகிறார்கள்..

விஜயும் தமிழகத்தின் பல பகுதிகளும் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆளும் கட்சியனா திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி வருகிற 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தவெக போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தவெக தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்