தாயுடன் பேசிய ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜின்… நல்ல நிலையில் சுவாசம் – நம்பிக்கை அளிக்கும் செய்திகள் !

சனி, 26 அக்டோபர் 2019 (07:09 IST)
திருச்சி, மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் அவனது சுவாசம் நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.

திருச்சி அருகே மணப்பாறையில் ஆழ்துளை கிணறு ஒன்றில் இரண்டு வயது சுஜித் என்ற குழந்தை தவறி விழுந்து விழுந்து விட்டதை அடுத்து அந்த குழந்தையை உயிருடன் மீட்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர் 129 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் குழந்தை விழுந்தபோது 26 அடியில் இருந்தான். ஆனால் அவனை மீட்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இப்போது 60 அடிக்கு மேல் சென்று விட்தாகத் தெரிகிறது.

குழந்தையைக் காப்பாற்ற மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் கருவி பயன்படுத்தப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. பின்னர் ஐஐடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கண்டுபிடித்த கருவி முயற்சித்துப் பார்க்கப்பட்டது.  செயற்கை சுவாசம், கேமரா ஆகிய நவீன வசதிகள் உள்ள கருவியான அதனால் ஆழ்துளைக் கிணற்றின் குறுகலான ஆழம் காரணமாக உள்ளே அனுப்ப இயலவில்லை.

இதையடுத்து சென்னையில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு அழைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இன்று காலை மணப்பாறையை வந்தடையு என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் குழந்தையிடம் தொடர்புகொண்டு பேசிய போது அவனது தாயிடம் பேசியுள்ளது நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் அவனது சுவாசம் நல்ல நிலையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்