பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் சூர்யா கைது: அண்ணாமலை கண்டனம்
வியாழன், 23 ஜூன் 2022 (18:26 IST)
பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் சூர்யா கைது: அண்ணாமலை கண்டனம்
சமீபத்தில் பாஜகவில் இணைந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் தனது காரில் சூர்யா சென்று கொண்டிருந்த போது பேருந்து ஒன்று மோதியதாக தெரிகிறது. இதனை அடுத்து கார் மீது மோதிய பேருந்தை சூர்யா கடத்தியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது
இதனை அடுத்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் திருச்சி சிவா மகன் சூர்யாவை கைதுசெய்துள்ளனர். திருச்சி சிவா மகன் சூர்யா கைது செய்யப்பட்டதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
பொய்யான வழக்குகளை தொடுப்பது திமுக அரசுக்கு புதிதல்ல என்றும் சகோதரர் சூர்யா சிவா கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறது பாஜக என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்