திரௌபதி முர்முவுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு!

புதன், 22 ஜூன் 2022 (09:24 IST)
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. 

 
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 17ஆம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. 
 
பாஜக தரப்பில் ஒரு வேட்பாளரும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரும் நேருக்கு நேர் மோதல் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர் கட்சிகளின் வேட்பாளராக நேற்று யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். 
 
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒரு பெண் அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று புதிய குடியரசுத் தலைவராவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
இதனையடுத்து பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது மத்திய அரசு. ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்