அப்போது அவர் கூறியதாவது :
தமிழகத்திற்கு வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் முதலீடுகள் தேவைப்படுகிறது. அந்த முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காகத்தான் முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார் . அதேசமயம் திமுக தலைவர் ஸ்டாலினைப்போல் சொத்து வாங்க முதல்வர் வெளிநாடு செல்லவில்லை என விமர்சித்திருந்தார்.
இதற்கு முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனது வெளிநாட்டு பயணத்தில் ஒளிந்துகிடக்கின்ற மர்மங்களை உணமையாக காரணங்களை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.