இந்நிலையில், புதிய அமைச்சரவை பட்டியலில், 13 புதிய முகங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கியுள்ளார் ஜெயலலிதா. இதில், இதில், அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட விஜயபாஸ்கர் 81,936 வாக்குகள் பெற்று வெற்றியை கைப்பற்றினார். இவருக்கு அடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் பேங்க் சுப்பிரமணியன் 81, 495 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையே 441 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் ஆகும்.
இந்த தொகுதியில், தன்னை வெற்றி பெறவிடாமல் அதிமுக நிர்வாகிகள் சிலரே சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, கதறி கண்ணீர் விட்டார் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர். இது குறித்த தகவல்களை அப்படியே முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கும் ஆதாரங்களுடன் அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், சதியை மீறி விதியால் வெற்றி பெற்ற விஜயபாஸ்கருக்கு மேலும் இன்பஅதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவருக்கு போக்குவரத்துறை அமைச்சர் பதவி வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இந்தியாவிலே கரூர்தான் பேருந்து கட்டுவதற்கு மிகவும் புகழ் பெற்றது என்பதால், விஜயபாஸ்கருக்கு போக்குவரத்துறை வழங்கப்பட்டுள்ளதாம்.