ராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்: எச்சரிக்கை விடுத்த போக்குவரத்து துறை

புதன், 17 ஜூலை 2019 (20:01 IST)
ராபிடோ ஆப் பயன்படுத்தி பயணம் செய்வது ஆபத்து என்றும், அந்த அப்ளிகேசனை உபயோகிப்பதை தவிர்க்குமாறும் மக்களுக்கு போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் பல நகரங்களில் இந்த ராபிடோ உபயோகத்தில் உள்ளது. ஊபர் டாக்ஸி புக் செய்வது போல ராபிடோவில் பைக்கை புக் செய்யலாம். பைக்கில் பயணம் செய்ய டாக்ஸியை விட குறைவாகவே செலவு ஆவதால் பலரும் அதை விரும்புகின்றனர். ஆனால் டாக்ஸி ஓட்டுனர்களோ இதனால் தங்கள் வருமானம் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

இது குறித்து போக்குவரத்து துறை விடுத்த அறிவிப்பில் “பைக் சொந்த உபயோகத்துக்கானது. அதை வருமானம் ஈட்ட பயன்படுத்தக்கூடாது. மேலும் இதுபோன்று பைக்கில் வாடகைக்கு பயணிப்பது பாதுகாப்பானது அல்ல. எனவே பொதுமக்கள் ராபிடோ போன்ற அப்ளிகேசன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.” என்று கூறியுள்ளனர்.

மேலும் இதுபோன்று ராபிடோவுக்கு செயல்பட்டு வந்த 30 பைக்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்