ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: போக்குவரத்து மாற்றம்!

புதன், 27 ஜனவரி 2021 (07:35 IST)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜனவரி 27ஆம் தேதி திறக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுகிறது.
 
இதனை அடுத்து போக்குவரத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவையொட்டி இன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை என காவல்துறை அறிவித்துள்ளது
 
அடையாரில் இருந்து வரும் வாகனங்கள் கச்சேரி சாலை வழியாகவும் பாரிமுனையில் இருந்து வரும் வாகனங்கள் திருவல்லிக்கேணி வழியாகவும் திருப்பி விடப்படுகின்றன என காவல்துறை தெரிவித்துள்ளது இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது 
 
இன்று நடைபெறும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதிமுக எம்எல்ஏக்கள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்