2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொங்கல் திருவிழா - வீடியோ பாருங்கள்
சனி, 30 ஜூன் 2018 (16:40 IST)
பொங்கல் திருவிழாவானது, ஆண்டு தோறும் தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடி வரும் நிலையில், கரூர் அருகே ஒரு குறிப்பிட்ட இன மக்களோடு, மற்ற இன மக்களும் இணைந்து, அதாவது சுமார் 40 கிராம மக்கள் ஒன்றிணைந்து திறந்த வயில் வெளியில் பொங்கல் வைத்த சுவாரஸ்ய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
இயற்கையையும், தங்கள் சமூக மக்களின் கலாச்சாரம் பேணுவதற்காக நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, ஒரு வித பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து சடையப்ப சித்தரின் அருள் பெற்றனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, வேட்டமங்கலம் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் சடையப்ப சித்தர் சுவாமி கடந்த 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மூதாதையர்களால் உருவாக்கப்பட்டது. இந்த சடையப்ப சித்தர் (வேட்டுவக்கவுண்டர்கள்) ஒரு குறிப்பிட்ட இன மக்களின் காவல்தெய்வமாகவும், குல தெய்வமாகவும் இருக்கிறது.
இப்பகுதியில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் தெய்வமாக இருந்து வந்துள்ளது. ஆகவே, 12 வருடங்கள் என்று இடைவெளி விட்டு, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுடன் மற்ற மக்களும் இணைந்து சடையப்ப சித்தருக்காக நள்ளிரவு வரை பொங்கல் வைத்து சடையப்ப சித்தருக்கு பச்சை பூஜை விழாவினை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
இந்த பொங்கல் திருவிழாவிற்கு பக்தர்கள் பொங்கல் வைக்க வேண்டுமென்றால், வீட்டிலிருந்து எதுவும் எடுத்து வரக்கூடாது, மண் பானை, அரிசி ஆகியவைகளை கோயில் சார்பிலே வழங்கப்படும் நிலையில், அந்த அரிசியும், ஒரே வயில் வெளியில் விளவிக்கப்பட்டதோடு, ஒருவர் கைப்பக்குவத்திலேயே குத்தல் செய்யப்படுமாம்.
இந்த சம்பிரதாயத்தில் அந்த இன மக்களுக்கு முழு வரியும் மற்ற இன மக்களுக்கு அரை சதவிகிதம் தான் வரி என்பது மேலும், ஒரு சிறப்பு, இப்படி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகழ் பெற்ற சடையப்ப சித்தருக்காக வயல்வெளியில், வேண்டுதலுக்காக வைக்கப்படும் இந்த மண்பானை பொங்கல் நிகழ்ச்சியானது தமிழக அளவில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.