கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு!

செவ்வாய், 26 ஜூன் 2018 (13:22 IST)
கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தினை முன்னிட்டு, பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார் – சிவனடியார்கள் ஆடல்  பாடல்களுடன், மேளதாள வாத்தியங்களுடன் ஆங்காங்கே கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு.
கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தினை முன்னிட்டு, பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார் – சிவனடியார்கள் ஆடல் பாடல்களுடன், மேளதாள வாத்தியங்களுடன் ஆங்காங்கே கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு கரூர் அருள்மிகு ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், ஆனி மாத பிரதோஷ வழிபாடு காலை முதல் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது. 
 
பிரதோஷத்தினை முன்னிட்டு, பிரதோஷ நாயனார், வெள்ளி ரிஷப வாகனத்தில் வீற்றிருக்க, பலவண்ண மலர்களினால் அலங்கரிக்கப்பட்டு, அருகம்புல் சாத்தப்பட்டு எழுந்து அருள் பாலித்த பிரதோஷ நாயனாரை, ஆங்காங்கே பக்தர்கள் தோளில் சுமந்து, கோயிலில் இருந்து, வெளியே ஆலயத்தின் வளாகத்தினுள்ளேயே, ஆங்காங்கே கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு, விஷேச வழிபாடு நடத்தப்பட்டது. சிவனடியார்கள், தீப்பந்தம் சுமந்து, ஆடி, பாடி, தோளில் சுமந்து வந்த பிரதோஷ நாயனாரை, மேள தாள வாத்தியங்கள் முழங்க, மீண்டும் கோயிலுக்குள் புறப்பட்டு சென்றார். இந்நிகழ்ச்சியில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீற்றிருந்த பிரதோஷ நாயனாரை வழிபட்டு, அவரை சுற்றியும் வேண்டி, தங்களது  நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி கடவுள் அருள் பெற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்