நாளை நள்ளிரவோடு முடிவுக்கு வருகிறது பழைய 500 ரூபாய் நோட்டுகள்

புதன், 14 டிசம்பர் 2016 (12:54 IST)
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து புழக்கத்தில் இருந்த 14 லட்சம் கோடி ரூபாய் தாள்கள் மதிப்பை இழந்துள்ளன. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் தற்போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஓரளவிற்கு பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.


 

இந்நிலையில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் நாளை இரவு 12 மணிக்கு மேல் செல்லாது. தற்போது பழைய 500 ரூபாய் நோட்டுகளை காஸ் சிலிண்டர், அரசு வரி கட்டுதல், டோல்கேட்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் நாளை நள்ளிரவுக்கு மேல் செல்லுபடியாகாது.

ஆனால் வங்கிகளில் இம்மாத இறுதிவரை டெபாசிட் செய்துகொள்ளலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்