நிவர் புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:10 IST)
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் தற்போது வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் வலுவடைந்துள்ளதால் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சுற்றுவட்டார மாவட்டங்களில் 100 முதல் 120 கி.மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
எனவே, நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழக அரசு நிவர் புயலை எதிர்கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்