6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை: வானிலை மையம் தகவல்

புதன், 27 செப்டம்பர் 2023 (07:51 IST)
தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வங்க கடலில் உருவாகிய சூறாவளி சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும், அதேபோல் ராணிப்பேட்டை,  வேலூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்