3 நாட்களுக்கு கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்? – வானிலை ஆய்வு மையம்!

சனி, 16 ஜூலை 2022 (08:43 IST)
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஓர மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்