இன்றும் விலை உயர்ந்த் பெட்ரோல், டீசல் விலை: சென்னை விலை நிலவரம்

சனி, 26 மார்ச் 2022 (08:26 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் திடீரென சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை உயரத் தொடங்கியது என்பதை பார்த்தோம் 
 
பெட்ரோல் டீசல் கேஸ் ஆகிய மூன்றும் ஒரே நாளில் உயர ஆரம்பித்தது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து 104.43 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று டீசல் விலையும் 76 காட்சிகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 94.47 என்ற விலையில் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்