ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்
சனி, 26 மார்ச் 2022 (08:05 IST)
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வலி நிவாரணிகள் தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது என இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது
கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்