126வது நாளிலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: என்ன காரணம்?
வியாழன், 10 மார்ச் 2022 (07:23 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளிலும் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்பது தெரிந்ததே.
ஆனால் இந்தியாவில் மட்டும் கடந்த 125 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருக்கும் நிலையில் இன்று 126வது நாளாக விலை உயர்வில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
உலகம் முழுவதும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் போது இந்தியாவில் மட்டும் வராமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் நாளை முதல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.