இந்த நிலையில் சற்று முன்னர் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 18 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையாக விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைத்தால் 70 ரூபாய்க்கு பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது