இன்றிரவு 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Siva

ஞாயிறு, 7 ஜனவரி 2024 (18:43 IST)
சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

ALSO READ: நாங்கள் தென்கொரியாவை தாக்கவில்லை: வடகொரியா அதிபர் கிம் ஜான் உன்னின் தங்கை பேட்டி..!
 
மேலும் நாளை தமிழகத்தில் அனேக இடங்களிலும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களிலும் கன மழை பெய்யும் என்று 9ஆம் தேதி தென் தமிழகத்தில் உள்ள சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Ediited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்