’அப்பல்லோவில் இன்று’ - கேரள ஆளுநர், முதல்வர்!

திங்கள், 10 அக்டோபர் 2016 (14:08 IST)
கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.

 

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் உலா வருகின்றன. ஆனால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
 
இதற்கிடையில், முதல்வரை, தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் சந்திக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், யாரையும் மருத்துவமனை நிர்வாகம் சந்திக்க அனுமதிக்கவில்லை.
 
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மட்டும் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டு இருந்த வார்டுக்கு சென்றதாகவும், ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
 
இதுவரை, தென்னிந்திய திரைப்பட சங்க தலைவர் நாசர், அரசியல் பிரபலங்கள் திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன், தா.பாண்டியன், சீமான், வைகோ, ஸ்டாலின், வெங்கய்யா நாயுடு, ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துச்சென்றனர்.
 
இந்நிலையில், இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கேரள ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் வந்தனர். பின்னர், அவர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்