இன்று சென்னை வருகிறார் டிடிவி தினகரன்: எதற்கு தெரியுமா?

வியாழன், 27 ஏப்ரல் 2017 (06:29 IST)
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரூ.60 கோடி இடைத்தரகர் சுகேஷ் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி முன் நேற்று மதியம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தினகரனுக்கும், அவருடைய நண்பருக்கும் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு  டெல்லி காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.



 


மேலும் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர்களை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் மனு செய்தனர். இதையடுத்து, தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

தினகரனை காவலில் எடுக்க அனுமதி கிடைத்ததை அடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அனேகமாக இன்று மாலை அவர்கள் சென்னை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்