இன்று காவிரி வழக்கு: என்ன செய்ய போகிறது மத்திய அரசு?

வியாழன், 3 மே 2018 (08:24 IST)
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கும் காவிரி பிரச்சனைக்கு இன்றாவது தீர்வு கிடைக்குமா? என்பதே தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. இன்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி காவிரி பிரச்சனைக்காக வரைவு திட்டம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொடுத்த கால அவகாசம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமா? அல்லது மீண்டும் அவகாசம் கேட்குமா? என்பதை இன்னும் ஒருசில மணி நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 
இன்றைய வழக்கு விசாரணையை நேரில் பார்க்க தமிழக அமைச்சர் சிவி சண்முகம் டெல்லி சென்றுள்ளார். கடந்த விசாரணையின்போது இவர் டெல்லி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று காவிரி வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்று பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் என்னவாக இருக்கும்? அந்த உத்தரவுகளுக்கு ஏற்ப செயல்படுவது எப்படி? என்பது குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் நேற்று இரவு 3 மணி நேரம் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்