இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள்.. ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்..!

புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:26 IST)
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை சிறப்பு ஆனதாக கருதப்பட்டாலும் ஆடி அமாவாசை என்பது கூடுதல் சிறப்புடன் கருதப்படும் என்பதும் சதுரகிரி உள்பட பல இடங்களில் ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் குவிந்து இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
குறிப்பாக அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்து புனித நீராடுவார்கள் என்பதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்ததை அடுத்து பக்தர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே ஆடி மாதத்தில் ஒரு அமாவாசை வந்த நிலையில் இன்றும் அமாவாசை தினம் என்பதால்  சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 
இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர் என்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்