குரூப் 1 தேர்வுக்கு 90 காலி இடங்கள் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பணிகளின் விபரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அனைத்து பணியிடங்களுக்கும் குறைந்தபட்ச வயது 21 எனவும், அதிகபட்ச வயது 34 எனவும் இருக்க வேண்டும். எம்பிசி, டிசி, பிசி முஸ்லிம்கள், எஸ்சி, எஸ்டி தேர்வாளர்களுக்கும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த கைம்பெண்களுக்கும் 39 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.