முன்கூட்டியே வெளியானது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள்...!

Siva

வியாழன், 11 ஜனவரி 2024 (14:29 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே இன்று வெளியாகி உள்ளதை அடுத்து விண்ணப்பதாரர்கள் முடிவுகளை பார்த்து வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்கள் மற்றும் குரூப் 2ஏ பதவிகளில் சுமார் 6000 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது

இதற்கான முதன்மை முதல் நிலை தேர்வுகள் முடிந்து, கடந்த ஆண்டு 25ஆம் தேதி முதனிலை தேர்வுகள் நடைபெற்றது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்று வெளியாகி உள்ளது. இந்த முடிவுகளை தேர்வுகள் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx என்ற இணையதளத்தில் தேர்வர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்