பீட்டாவை தேடினால் ஆபாச படம் - தடை செய்ய தமிழக அரசுக்கு கடிதம்

புதன், 1 பிப்ரவரி 2017 (18:31 IST)
பீட்டா அமைப்பின் இணையதளத்தை இணையத்தில் தேடினால், ஆபாச படங்கள் வருவதால், பீட்டா இணையதளத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.


 

 
ஜல்லிக்கட்டு வேண்டி தமிழகமெங்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராடிய போது, பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். மேலும், பல்வேறு தரப்பில் இருந்து பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியதால், இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், பீட்டா இணையதளத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் போர்க்கொடி தூக்கியுள்ளது. பீட்டா பற்றி இணையதளத்தில் தேடினால் ஏராளமான ஆபாச படங்களே வருகிறது. இதை பார்க்கும் குழந்தைகள், மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், பீட்டாவின் இணையதளத்தை தடை செய்ய வேண்டும் என அந்த ஆணையம், தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.
 
இது பீட்டா அமைப்பிற்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்