தமிழக அரசு போக்குவரத்துத்துறையின் அரசு பேருந்துகள் நெடுந்தூரம் பயணிக்கையில் உணவு அருந்துவதற்காக நெடுஞ்சாலை உணவகங்களில் நிறுத்துவது வழக்கம். சமீபத்தில் போக்குவரத்துத்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில் இனி அரசு பேருந்துகளை உணவருந்த சைவ உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பயணிகள், பொதுமக்கள் இடையே கடும் கண்டனங்கள் எழுந்தன. அசைவம் உண்ண விரும்புபவர்களை சைவம்தான் சாப்பிட வேண்டும் என கட்டாயப்படுத்துவது போல உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக போக்குவரத்துத்துறை அரசு பேருந்துகளை அசைவ உணவகங்களிலும் நிறுத்தலாம் என தெரிவித்துள்ளது.