ரூபெல்லா தடுப்பூசி வேண்டாம்? ஆபத்தானது? வாட்ஸப் வதந்தி

வெள்ளி, 27 ஜனவரி 2017 (17:57 IST)
மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி அடுத்த மாதம் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற அரசு அறிவிப்புக்கு எதிராக வாட்ஸப்பில் தடுப்பூசி போட வேண்டாம் என்றும், அது ஆபத்தானது என்றும் சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர்.


 

 
மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை குழந்தைகளுக்கு வராமல் தடுக்கும். இந்த தடுப்பூசி ஆரம்பத்தில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் போடப்பட்டு வந்தது. தற்போது சிலரின் முயற்சியால் அரசாங்கம் மூலம் அனைவருக்கும் இலவசமாக போடப்படுகிறது. 
 
அடுத்த மாதம் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் இந்த மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி போடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிராக சிலர் வாட்ஸப் மூலம் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
 
இந்த மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம். இது ஆபத்தானது. இதற்கு பின்னால் பெரிய சதி வேலை நடைப்பெறுகிறது. வெளிநாட்டுக்கு சொந்தமான இந்த தடுப்பூசியை அரசாங்கம் கட்டாயப்படுத்தி போட்டுக் கொள்ள சொல்கிறது என்று வதந்தியை பரப்பி வருகிறது.
 
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது கூறியதாவது:-
 
மீசெல்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசியால் எந்த பிரச்னையும் குழந்தைகளுக்கு வராது. ரூபெல்லா எனும் கொடிய வியாதியில் இருந்து குழந்தைகளைக் காக்கவே இந்த தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து சிறார்களுக்கும் இந்த தடுப்பூசியை போட்டக் கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்