தமிழக அரசியல் தலைவர்கள் பூனைக்குட்டி தான்: சு.சுவாமி நக்கல் பேச்சு!

புதன், 5 ஜூலை 2017 (12:32 IST)
தமிழர்கள் விவகாரத்திலும், தமிழக அரசியல் தலைவர்கள் பற்றியும் அடிக்கடி சர்ச்சையாக பேசுபவர் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. ஜல்லிக்கட்டு சமையத்தில் தமிழர்களை பொறுக்கிகள், எலி என கூறிய சுப்பிரமணியன் சுவாமி தற்போது தமிழக அரசியல் தலைவர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.


 
 
சுப்பிரமணியன் சுவாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழக அரசியல் தலைவர்கள் இங்கே புலியாக இருந்தாலும், டெல்லிக்கு சென்றால் அவர்கள் பூனைக்குட்டி தான் என நக்கலடித்துள்ளார்.
 
மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தான் ஆபத்து என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்