உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
அந்த செய்திகுறிப்பில், அடுத்த ஆறு மாதங்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையை மதிப்பிட்டு, சோதனைக்கு தேவையான கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை உயிரியல் மருத்துவ பொறியாளர்கள் சரிபார்த்து, பயன்படுத்தப்படாத செறிவூட்டிகளை பாதுகாப்பான இடத்தில் சேமிக்க வேண்டும். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அவசரகால பயன்பாட்டிற்கு தயாராக இருக்க வேண்டும்.
என்95 மாஸ்க், பிபிஇ சோதனை கிட் உள்ளிட்ட அத்தியாசிய பொருட்கள், மருந்துகளின் இருப்பு மற்றும் தேவை மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
மருத்துவ கல்லூரி வளாகங்களில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதோடு, தடுப்பூசி மையம் முழுவீச்சில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுகளில் தேவைப்பட்டால் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த படுக்கைகளை இருப்பு வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.