முகக் கவசத்தை பதுக்கினால் குண்டர் சட்டம்: தமிழக அரசு அதிரடி

திங்கள், 23 மார்ச் 2020 (07:39 IST)
முகக் கவசத்தை பதுக்கினால் குண்டர் சட்டம்
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் வெளியே போவதை தவிர்த்தும் அத்தியாவசிய பணி காரணமாக வெளியே சென்றால் முகக்கவசம் அணிந்தும் சென்று வருகின்றனர். ஆனால் இந்த நிலைமையை பயன்படுத்தி கொண்டு ஒருசில மெடிக்கல் கடைக்காரர்கள் முகக்கவசங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார்கள் குவிந்து வருகின்றாது
 
பொதுமக்களை  கொரானாவில் இருந்து காப்பாற்ற ஒரு பக்கம் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கோடிக்கணக்கில் செலவு செய்தும் மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இலாப நோக்கத்தை கருத்தில் கொண்டு ஒரு சில மருந்தகங்கள் முகக் கவசம் மட்டும் சானிடைசர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் முகக் கவசம் மற்றும் சானிடைசர்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்தும், ஒருசில கடைகள் சீல் வைக்கப்பட்டும் ஒருசில மெடிக்கல் கடைக்காரர்கள் திருந்துவதாக தெரியவில்லை. 
 
இந்த நிலையில் முகக் கவசம் மற்றும் சானிடைசர்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதன்பின்னராவது முகக் கவசம் மற்றும் சானிடைசர்களை பதுக்கி வைப்பது குறையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்