மார்ச் 31 வரை ஊரடங்கு வேண்டும் - சமூக வலைதளங்களில் வலுக்கும் குரல்கள்!

ஞாயிறு, 22 மார்ச் 2020 (17:09 IST)
நாடு முழுவதிலும் இன்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை பல மாநிலங்கள் கால நீட்டிப்பு செய்துள்ள நிலையில் தமிழகத்திலும் நீட்டிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று பிரதர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மக்கள் சுய ஊரடங்கு பின்பற்றப்பட்டது. பாஜகவின் எந்தவொரு திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளாத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இன்று வெற்றிகரமாக மக்கள் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் ஜார்க்கண்ர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய சில மாநிலங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மார்ச் 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன. தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 வரை இந்தியா முழுவதும் பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் மற்ற மாநிலங்களை போல மார்ச் 31 வரை ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் கேட்டு வருகின்றனர்.

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் தேவைப்பட்டால் தேர்வுகள் முடிந்த பிறகு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்