அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு .. விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு..!

Siva

வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:54 IST)
சென்னையில் அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மகாவிஷ்ணு என்பவர் சென்னையில் உள்ள 2 அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 
யாருடைய அனுமதியில் இதுபோன்ற சொற்பொழிவாளரை அரசு பள்ளிகளுக்குள் அனுமதித்தார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி, பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது என்றும் காரசாரமாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு என்ற நபர் மூலம் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது குறித்து பள்ளி கல்வித்துறை விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்