ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு செலவு ரூ. 1 கோடி....

ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (17:47 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்குக்காக தமிழக அரசு ரூ.1 கோடி செலவு செய்தது தெரிய வந்துள்ளது.

 
மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் சையது தமீம், ஜெயலலிதா மறைவு தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் பொது தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
 
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்காக தமிழக அரசு எவ்வளவு செலவு செய்தது? என்ற கேள்விக்கு ‘தமிழக அரசு எந்த செலவையும் செய்யவில்லை’ என பதில் கிடைத்துள்ளது.
 
அதேபோல், அவரின் இறுதிச்சடங்கிற்கு அரசு எவ்வளவு செலவு செய்தது என அவர் எழுப்பிய கேள்விக்கு, தமிழக அரசு பொதுப்பணித்துறை சார்பில் ரூ.99 லட்சத்து 33 ஆயிரத்து 586 செலவு செய்யப்படது என பதில் கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்