காலி படுக்கை, ஆக்சிஜன் விவரங்கள் தெரிய வேண்டுமா? இணையதள தகவலை வெளியிட்ட தமிழக அரசு

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (15:55 IST)
காலி படுக்கை, ஆக்சிஜன் விவரங்கள் தெரிய வேண்டுமா?
தமிழகத்தில் தினமும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது 
 
மேலும் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி ஆகிவிட்டதாகவும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் இருப்பு எவ்வளவு? காலியாக உள்ள படுக்கைகளில் எண்ணிக்கை எவ்வளவு? போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள தமிழக அரசின் இணையதள முகவரி ஒன்றை வெளியிட்டுள்ளது
 
https://stopcorona.tn.gov.in/beds.php என்ற இந்த இணைய தளத்தை சென்று பார்த்தால் ஆக்சிஜன் இருப்பு, வென்டிலேட்டர் வசதி, ஐசியூ வசதி, காலியாக உள்ள படுக்கைகள் உள்பட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறி இந்த இணையத்தளத்தில் தகவல்களை தெரிந்து கொண்டு அதன் பின் கொரோன நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்