பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு

புதன், 22 ஜனவரி 2020 (21:34 IST)
பொது இடங்களில் குப்பை கொட்டுவது என்பது தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் நடைமுறை என்பது தெரிந்ததே. ஆனால் இனிமேல் அவ்வாறு குப்பை கொட்டினால் அபராதம் மற்றும் தண்டனை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
 
ஆம், பொது இடங்களில் குப்பையை கொட்டினாலோ அல்லது எச்சில் துப்பினாலோ அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அரசாணை ஒன்றையும் தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
 
இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:  குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனி தனியே கட்டண முறையை அமல்படுத்தப்படும்
 
பொது இடங்களில் குப்பையை கொட்டுவது, எச்சில் துப்புவது, குப்பையை எரித்தல், போன்றவைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அடுத்த 3 மாதங்களில் அமல்படுத்தப்படும். மேலும் விரைவில் தமிழகம் முழுவதும் இந்த சட்டம் விரிப்படுத்தப்படும்’ என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்