தடுப்பூசி உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் தமிழக அரசு - மத்திய அரசின் முடிவு என்ன?

செவ்வாய், 1 ஜூன் 2021 (10:30 IST)
செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார்.

 
மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையில் தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து இயந்திரங்களும் தயார் நிலையில் இருந்தும் கடந்த சில வருடங்களாக அந்த ஆலை இயங்காமல் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு தடுப்பு ஊசி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  
 
தமிழகத்திடம் அந்த ஆலையை ஒப்படைத்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பது பற்றி பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. விசிக எம்.பி.ரவிக்குமாரின் கோரிக்கை பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில் கடிதம் எழுதியுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி போடப்பட வேண்டும். மேலும், மத்திய அரசு முன்னின்று கொரோனா தொற்றை எடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்