நாட்டு மாடுகளை பாதுகாக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
வியாழன், 16 மார்ச் 2017 (15:54 IST)
ஜல்லிக்கட்டுக்கு நடந்த போடாட்டத்தின் எதிரோலியாக தமிழகத்தில் உள்ள நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க இன்று அறிவித்த பட்ஜெட்டில், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2017-2018 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயகுமார் இன்று காலை 10.30 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்தார். மற்ற அரசியல் கட்சியினர் பலரும் பட்ஜெட் பற்றி பலவிதாமான கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நாட்டு மாட்டு இனங்களை காப்பாற்ற பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில்,
புதிதாக 25 கால்நடை கிளை மையங்கள அமைக்கப்படும்.
மதுரையில் 40 கோடி செலவில் 25 ஆயிரம் லிட்டர் கொள்ளவு திறன் கொண்ட நறுமண பால் தயாரிக்கும் மற்றும் புதிய உயர் வெப்பநிலையில் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டம் தான் காரணம். இதையடுத்து தமிழக அரசு நாட்டு இன மாடுகளை காக்க கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.