பள்ளிக்கு செல்லாமல் பிளஸ் 2 தேர்வு எழுதும் திட்டம் ரத்து: தமிழக அரசு அதிரடி

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (21:30 IST)
பள்ளிக்கு செல்லாமலேயே குறிப்பிட்ட வயது இருந்தால் மட்டும் போதும், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த திட்டம் வரும் 2019ஆம் ஆண்டு கல்வியாண்டுடன் முடிவுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
எனவே இனிமேல் பள்ளிக்கு சென்றவர்கள் மட்டுமே பிளஸ் டு உள்பட அனைத்து தேர்வுகளும் எழுத முடியும் என்றும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து படிப்பவர்களும், டுடோரியலில் இருந்து படிப்பவர்களும் இனி தேர்வு எழுத முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய அறிவிப்பு கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏறபடுத்தியுள்ளதாக தெரிகிறது. ஏழ்மை காரணமாக இடையில் பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்கள் நேரடியாக பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வை எழுதி வந்தனர். இனிமேல் அவ்வாறு தேர்வை எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்