இது சன் தொலைக்காட்சி நிறுவனத்து அதிருப்தியை ஏற்படுத்த ராதிகா தயாரித்து நடித்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 தொலைக்காட்சி தொடரை முடித்துக் கொள்ளுமாறும் சொல்லியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதை ராதிகா மறுத்து வந்தார். இந்நிலையில் இப்போது அவர் சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆனால் இப்போது ராதிகா வேடத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனா ஆகியோரிடம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. இருவரும் இன்னமும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நிலையில் மிகப்பெரிய அளவில் சம்பளம் கொடுத்தாவது இருவரில் ஒருவரை நடிக்க சம்மதிக்க வேண்டும் என்ற முனைப்பில் தயாரிப்பாளர்களும் சன் தொலைக்காட்சி நிறுவனமும் உள்ளதாம்.