அரசு ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இம்மாத சம்பளத்தை 28ஆம் தேதி வழங்குவதாக ஆணை பிரப்பித்து, பின்னர் வழக்கம் போல் மாதத்தின் கடைசி நாளே ஊதியம் வழங்கப்படும் என்று அதை ரத்து செய்தது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அக்டோபர் மாத ஊதியத்தை நாளை மறுநாள் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கூறினார்.
தமிழக அரசு செயல்பாடு எந்த அளவுக்கு தடுமாற்றத்தில் உள்ளது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். அக்டோபர் மாத ஊதியம் 28ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்து அரசு ஆணை பிறப்பித்து, பின்னர் அதை ரத்து செய்து வழக்கம் போல் தான் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.
தமிழக அரசின் இந்த குளறுபடியால் அரசு பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர் மாத ஊதியத்தை நாளை மறுநாள் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கூறினார்.