தனது கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ராணுவ வீரரை நல்லடக்கம் செய்த நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை. அதற்கு இது சரியான தருணம் இல்லை. இது போன்ற அரசியல் செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.