ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

திங்கள், 4 மே 2020 (17:19 IST)
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை முதல்வர் பழனிசாமி திடீரென சந்தித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 3ஆம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வுகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்ய சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆளுனருடனான சந்திப்பு முடிவடைந்ததும் தமிழக அரசிடம் இருந்து முக்கிய அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்