பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடும் அமைச்சரவைக் கூட்டம்!

வியாழன், 8 ஜூன் 2017 (10:14 IST)
வரும் 14-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில், வரும் 14-ஆம் தேதி தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
 
மேலும் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக முப்பதுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் செயல்பட உள்ளனர். இந்த சூழல் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்