இந்நிலையில் அரசின் இந்த உள்ஒதுக்கீடுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்நாட்டு மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்காமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் ஓபிசி பிரிவினரில் 22 சாதியை சேர்ந்தவர்களுக்கு வெறும் 2.5% மட்டுமே இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றும், அரசியல் லாபத்துக்காக அரசு இதுபோன்ற உள்ஒதுக்கீடுகளை அறிவிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தி விரைவில் நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.