பொய் செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! – திருப்பத்தூர் போலீஸ் எச்சரிக்கை!

சனி, 2 மே 2020 (11:29 IST)
திருப்பத்தூரில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த போலீஸார் அனுமதித்ததாக வெளியான பொய் செய்திக்காக நடவடிக்கை எடுத்துள்ள போலீஸார் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற தொடர்ந்து காவல் பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூரில் இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடத்துவதாகவும்., அதற்கு போலீஸார் உதவுவதாகவும் பொய் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் போலீஸார் உடனடியாக போலி செய்தியை ஆராய்ந்ததில் அதில் உள்ள புகைப்படம் அலகாபாத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் விளக்கம் அளித்துள்ள திருப்பத்தூர் போலீஸார், போலி தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்