இதையடுத்து அதன் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆய்வு நடத்தியதை அடுத்து லாரிக் கைப்பற்றப்பட்ட நாளுக்கு மறுநாள் இரவு காரில் வந்த இருவர் லாரியில் இருந்து டீசல் மற்றும் பேட்டரி ஆகியவற்றைத் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின. அந்த திருடர்களில் ஒருவர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஐ. கார்த்திகேயன் என்பதும் மற்றொருவர் ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ் உறுப்பினரான முருகன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து கார்த்திக்கேயன் காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.