திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கக்கூடாது: கலெக்டர் அறிவிப்பு

சனி, 15 அக்டோபர் 2022 (18:28 IST)
கந்த சஷ்டி தினத்தில் திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கோவிலில் தங்க கூடாது என கலெக்டர் அறிவித்துள்ளார் 
 
வரும் 30ஆம் தேதி இந்த ஊரில் சூரசம்காரம் காண்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கலெக்டர் செந்தில்ராஜன் கலந்து கொண்டார்
 
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்க பிஎஸ்என்எல் நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்ளப்பட்டது
 
 மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்று கலெக்டர் அறிவித்துள்ளார்/ சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே மூலம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்