மதுரையில் டிப்பன் பாக்ஸ் வெடிகுண்டு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

ஞாயிறு, 5 ஜூன் 2016 (09:04 IST)
மதுரை யானைக்கல் பகுதியில் நள்ளிரவில் நின்று கொண்டிருந்த லாரி மீது டிப்பன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவ வழக்கை சிபிசிஐடி போலீசார் வசம் மாற்றப்பட உள்ளது.
 

 
மதுரையின் மிகமுக்கிய பகுதியான யானைக்கல் பகுதியில் சந்திரபோஸ் என்பவர் பழம் கமிஷன் மண்டி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி  யானைக்கல் ஏ.வி. பாலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில், அந்த லாரிக்கு அடியில் டிப்பன் பாக்ஸ் வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததுள்ளது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இரண்டு பாட்டரிகளுடன் டிபன் பாக்ஸ் மற்றும் தடயங்களை கைப்பற்றினர்.
 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் தீவிர ஆலோசித்து நடத்தி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்