200 கோடியை விட்டு 2 ஆயிரம் கோடி அடிக்கவந்திருக்கார் விஜய்!.. ஜேம்ஸ் வசந்த் பேட்டி!...

Mahendran

திங்கள், 6 ஏப்ரல் 2026 (15:48 IST)
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறியுள்ளார். வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தலை அவரின் கட்சி சந்திக்கவிருக்கிறது. விஜய் அடிப்படையில் ஒரு நடிகர் என்பதால் ரசிகர்களின் வாக்குகள் தவெகவுக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதோடு அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் மீதும் அதிருப்தியில் இருப்பவர்கள் ஒரு மாற்று கட்சியாக விஜய்க்கு வாக்களிக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல், பெண்களின் ஆதரவும் விஜய்க்கு இருக்கிறது..

எனவே நடக்கவுஉள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற விட்டாலும் விஜய் 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்குவார் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். அதோடு தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தொடர்ந்து சொல்லி வருகிறார்..

மேலும் சினிமாவில் உச்சத்தில் இருந்தேன் அதை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என்று சொல்கிறார் விஜய். அதேபோல் தவெக நிர்வாகிகள் ஊடகங்களில் பேசும் போது ‘விஜய் 200 கோடி சம்பளம் வாங்குகிறார்.. அதை விட்டுவிட்டு அவர் மக்களுக்கு சேவைபுரிய வந்திருக்கிறார் என விஜயை ஏதோ தியாகி போல சித்தரித்து பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வஸந்த் ‘அரசியல் என்றாலே ஊழல் என்று மாறிவிட்டது. விஜயின் ஊழல் செய்யத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.. 200 கோடி விட்டு விட்டு வந்தாலும் இங்கே இருபதாயிரம் கோடி அடிக்க முடியும் என்று தெரிந்துதான் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்.. ஆனால் இது அவரை ஆதரிப்பவர்களுக்கு புரியாது..

விஜய் தூய சக்தியெல்லாம் கிடையாது.. அவரும் மக்களை ஏமாற்றத்தான் வந்திருக்கிறார்.. அவரின் பேச்சு, உடல்மொழி ஆகியவற்றை பார்த்தாலே அவர் ஒரு ஏமாற்று பேர்வழி என்பது எனக்கு புரிகிறது.. அதனால்தான் தைரியமாக விமர்சனம் செய்கிறேன்.. தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் பலரும் தற்கொலை செய்து கொள்வார்கள்.. இது நடக்கத்தான் போகிறது’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்